search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திவிஜ் சரண்"

    செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகியுள்ளனர். #DavisCup #YukiBhambri #DivijSharan
    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார்.

    ஆனால் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார்.

    இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.

    இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீயிடம் கேட்ட போது, ‘நாங்கள் சுமித் நாகலை தொடர்பு கொண்டு, பாம்ப்ரிக்கு பதிலாக அணியில் இணையும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதாக கூறி விட்டார். மேலும் அவர், ‘ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதனால் நான் மாற்று வீரர் இடத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஆட முடிவு செய்துள்ளேன். ஆனால் மிகவும் அவசியம் என்று கருதினால் அணியில் சேருகிறேன்’ என்றும் கூறினார். நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியாது. அதனால் இந்த போட்டிக்கு உங்களது பெயரை பரிசீலிக்க மாட்டோம் என்று அவரிடம் கூறி விட்டோம்’ என்றார்.  #DavisCup #YukiBhambri #DivijSharan 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. #AsianGames2018 #RohanBopanna
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.



    இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #RohanBopanna
    ×